ஆங்கிலம் கற்போம்......தமிழில்

Click here to edit subtitle

ஆங்கிலம் கற்போம்.........


அன்புடையீர் வணக்கம்,

        தங்களது பொன்னான நேரத்தில் ஐந்து நிமிடங்களை ஒதுக்கி வாசிக்க இருப்பதற்க்கு நன்றி...நண்பர்களே கொஞ்சம் கவனமாக, பொறுமையாக வாசிக்கவும்.

எனது பெயர் ஸ்டான்லி ஆப்ரஹாம். நான் ஸ்போக்கன் இங்லிஷ் வாத்தியார். தமிழகத்தில் இருக்கும் இது போன்ற வாத்தியார்களில் நானும் ஒருவன்.ஆனால் ஒரு சிறு வித்யாசம்.நான் ஆங்கிலத்தில் பேசி பந்தா காட்டும் வாத்தியார் அல்ல!!, என்னிடம் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைத்து பந்தா காட்டும் வாத்தியார்!!.

ஆங்கிலத்தை பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாத தமிழ் வழியில் படித்த மாணவர்களிடம், நிறைய ஸ்போக்கன் இங்கலிஷ் ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள்...காரணம் கேட்டால் "நாம இங்கிலீஸ்ல பேசுனாதானே அவங்களும் பேசுவாங்க"என்று சொல்கிறார்கள்.அய்யா, அந்த மாணவனே ஆங்கிலம் அவ்வளவாக ஒன்றும் தெரியாதவர், அவரிடம் நீங்க ஆங்கிலத்தில் பேசி, நீங்க என்னத்தை புரிய வைக்க போறீங்க? சரி விஷயத்துக்கு வருவோம்.

உலகம் முழுவதும் பெரும்பாலும் பேசப்படும் இந்த ஆங்கிலம் ஏன் நமக்கு மட்டும் குழப்பமாகவே இருக்கிறது? நமக்கு மட்டும் வரமாட்டேங்குது? ஏன்? ஏன்? இதற்கான காரணத்தை ஒரு சிறிய உதாரணம் மூலம் சொல்கிறேன்..... இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒருவர், அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும், அவர் உங்களிடம் தமிழ் கற்றுக்கொள்ள வருகிறார், அவருக்கு நீங்க தமிழ் சொல்லிகொடுக்கிறீர்கள் எப்படி? ய ர ல வ ழ ள , தேமாங்காய் , புளிமாங்காய், ஆசிரியப்பா வெண்பா, சொற்றொடர்...இந்த மாதிரி நீங்க அவருக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தால் , அந்த இங்கிலாந்து நாட்டவர் தமிழில் பேசுவாரா !!!? எத்தனை நாளானாலும் பேசமாட்டார் தானே?
 
இந்த மாதிரி தான் நிறைய ஆங்கில ஆசிரியர்கள் , ஆங்கிலம் கற்றுத்தருகிறேன் என கூறிக்கொண்டு பார்ட்ஸ் ஆப் ஸ்பீச், நவுன், ப்ரனவுன்,ப்ரிபோஸிஸண் , கஞ்சக்ஸன், பர்ஸ்ட் பெர்ஸன் ஸிங்குலர்,தேர்ட் பேர்ஸன் புளுரல்,  இப்படியே சொல்லிக்கொடுத்துகிட்டு இருக்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டு இருக்கின்றவரைக்கும், மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கடினம்.அப்படியென்றால்? வேறு வழியை தான் பின்பற்றவேண்டும்.

இங்கே பாருங்க நாம் மணிக்கனக்கா தமிழில் பேசுகிறோம், பக்கம் பக்கமா தமிழில் எழுத முடிகிறது எப்படி? நாம் பேசுவதில் , நாம எழுதுவதில் எது ஆசிரியப்பா? எது வெண்பா? எங்கே சொற்றொடர்? எங்கே மெல்லினம் வருது? இதெல்லாம் நமக்கு தெரியாது, ஆனால் சூப்பரா தமிழில் பேசுகிறோம், எழுதுகிறோம்...எப்படி? நம்ம சின்ன வயதில் இருந்தே, தமிழ் நம்ம தாய் மொழி என்பதனால் நாம் தமிழை பழகிவிட்டோம், தமிழ் இலக்கணத்தை நாம் ஓரளவேனும் பழகிக்கொண்டோம்.ஆனால் ஆங்கிலம் அப்படி அல்ல, நமக்கு ஆங்கிலத்தை பற்றிய அடிப்படையே சரியாக தெரியாது. எனவே ஆங்கிலத்தை சில சரியான வழியில் கற்றுக்கொண்டால்தான் வரும்.....அத விட்டுட்டு ஆங்கிலத்துக்கு உள்ளே இருக்கின்ற இலக்கணத்தை மட்டும் படித்துக்கொண்டு இருந்தால் ஒன்னும் பண்னமுடியாது.

நான் ஆங்கிலத்தை பாடமாக எடுத்து படிக்காததினால் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். ஆங்கிலத்தை தீவிரமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். கடந்த 10 வருடமாக அனைத்து வயதினர், தகுதியினருக்கும் ஆங்கிலத்தை வெற்றிகரமாக கற்றுக்கொடுத்து வருகிறேன். சில ஆயிரக்கணக்கானவர்களை இந்த 10 வருடங்களில்  ஆங்கிலத்தில் பேச வைத்துள்ளேன். ஆங்கில பயத்தை போக்கியுள்ளேன். கவனமாக வாசிக்கவும்.....ஆனால் எனது கல்வித்தகுதி பி.ஏ.,(பொது நிர்வாகம்). தமிழ்வழியில் படித்தவன் தான். எனவே தான் ஆங்கிலத்தை பற்றிய எனது பார்வை வேறு விதமாக இருக்கின்றது. இந்த விஷயத்தையும் கூட எல்லோரையும் போல ஆங்கிலத்தில் சொல்லி இருந்தால், நானும் ஒர் ஆங்கில குழப்பவாதியாகவே இருந்திருப்பேன். எனவே தான் தமிழில் சொல்கிறேன்.

ஆங்கிலம் பெரும்பான்மையானவர்களுக்கு கஷ்டமாக ஆனதற்கு காரணம் ஒரு சில ஆங்கில வாத்தியார்கள் தான், அவர்கள் செய்த குழறுபடிகள்தான். 

இங்க பாருங்க வெறும் 26 எழுத்து..ரொம்ப சாதாரணமான, எளிமையான மொழி ஆங்கிலம். இப்படி எளிமையான ஆங்கிலத்தை எல்லாரும் சேர்ந்து குழப்பிவிட்டார்கள். ஆங்கிலத்தில் உள்ள தவிர்க்க வேண்டிய விஷயங்களை (excemption case)மட்டும், இலக்கணத்தை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொத்த ஆங்கில வாக்கிய முறையையும் நான்கே நான்கு பக்கத்தில் முடிந்துவிடலாம்.

சரி, இந்த ஆங்கிலம் பெரும்பாலும் குழப்புவது எங்கெல்லாம்...நான் , நீ, எங்களை, அவர்களை, அவனுடைய, அவளுடைய...இந்த மாதிரி இருக்கும் சொற்கள் குழப்புகின்றன. அப்புறம் am , is was, have, has, had...இந்த மாதிரி சொற்கள் குழப்புகின்றன. to, for, in, by, at, இந்த மாதிரி சொற்கள் குழப்புகின்றன.
 சரி இதெல்லாம் ஏன் நமக்கு குழப்பமா இருக்கு? காரணம் பல ஆசிரியர்கள் இது மாதிரி சொற்களுக்கான பொருளை சொல்லிக்கொடுத்ததே இல்லை.

அனைத்து குழப்பத்துக்கும் காரணம் ...பல ஆங்கில வாத்தியார்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாது.

சரி. நான் எப்படி சொல்லிக் கற்றுத்தருகிறேன். நான் ஆங்கிலத்தை தமிழில் கற்றுத்தருகிறேன்.

ஆங்கில இலக்கணத்தை தொடக்கத்திலேயே சொல்லி, ஆங்கிலத்தில் பேசி, உச்சரிப்பை சரி பண்ணி...மாணவர்களை கசக்கி பிழிந்து சொல்லிக்கொடுப்பது இல்லை. ரொம்ப சாதாரணமாக தமிழில் கற்றுதருகிறேன்.

இங்க பாருங்க....இணையத்துல நிறைய ஸ்போக்கன் இங்கிலீஷ் வலைத்தளங்கள் இருக்கின்றன அவைகளில் எங்கேயாவது இங்கிலீஷ பத்தி, தமிழில் எழுதியிருக்கிறார்களா? ஃபர்ஸ்ட் பெர்ஸன் சிங்குலர்-ஸப்ஜக்ட்-ஆப்ஜக்ட் போன்ற வார்த்தைகளை சொல்லாத ஆங்கில ஆசிரியர் யாராவது இருக்கிறார்களா?

நான் இவ்வளவு நேரமாக சொல்லிக்கொண்டிருப்பது உங்களுக்கு புரிகின்றது... எப்படி? நான் தமிழில் சொல்வதனால்.

நான் ஆங்கிலத்தை பாடமாக எடுத்து படிக்கவில்லை, அதனால் நான் கற்றுத்தருவது சரியாக இருக்காது என்று நினைக்கவேண்டாம். எனது ஆங்கிலம் ஆணிவேரிலிருந்து, தெளிவாக , முழுமையாக இருக்கிறது. ஃபர்ஸ்ட் பெர்ஸன் சிங்குலர்-ஸப்ஜக்ட்-ஆப்ஜக்ட் என்ற இதுபோன்ற வார்த்தைகளை நான் எனது மாணவர்களுக்கு சொன்னது கிடையாது.ஏனென்றால் மாணவர்களுக்கு சப்ஜக்ட் என்றால் science subject, history subject  இது போன்ற சப்ஜெக்ட்டுகள் தான் தெரியும்.

இது தான் நான்.....
நான் இதில் சொன்னது பாதி மட்டுமே....
நேரடி வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள்,ஆன்லைன் வெப் கேமரா , மைக், இ மெயில்..மற்றும் பல வழிகள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தருகிறேன்....

நான் ஒரு ஆங்கில வாத்தியார் ...ரொம்ப ஆங்கிலம் தெரியும்...அப்படி எல்லாம் நினைக்கவேண்டாம்.....நான் மிக மிக சாதாரணமான ஆள். ஆங்கிலத்தை மாணவர்களுக்கு எளிமையாக சொல்லிக்கொடுக்க கற்றுக்கொண்டேன்.தமிழில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறேன். ....அவ்வளவுதான்.

யாரெல்லாம் படிக்கலாம்?...தமிழ் மொழியை எழுத,படிக்க தெரிந்த அனைவரும் படிக்கலாம்...கல்வித்தகுதி ஒரு பொருட்டல்ல.

மொத்த வகுப்பு எத்தனை நாட்கள்?.....மாணவர்களின் கற்கும் திறனை பொருத்தது.....குறைந்த பட்சம் 45 நாட்கள்....அதிக பட்சம் 90 நாட்கள்.

கட்டணம்?....10 நாள் வகுப்பு எடுத்த பிறகே....மாணவர்கள் திருப்தி அடைந்த பிறகே... முதல் தவணை பணத்தை பெற்றுகொள்கிறேன்.....மொத்த கட்டணம்........???? ரூபாய்.

ஆன் லைன் வகுப்புகளில் ஒரே கட்டணத்தில், ஒரே ஐடியில் எத்தனை நபர் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

நேரடி வகுப்புகள் / பாடதிட்டம்/ நேரம் / மற்றும் மேலும் விபரங்களுக்கு... கீழே உள்ள செல்போனில் தொடர்புகொள்ளவும்.


ஆன்லைன் வகுப்புக்கு இணைய இணைப்பு, வெப் கேமரா, ஸ்பீக்கருடன் கூடிய மைக் ஹெட்போன் அவசியம்.

இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு உங்களை ஆங்கிலத்தில் பேசவைக்கும், தமிழ்-ஆங்கிலம் மொழிமாற்றம்,ஆங்கிலம்-தமிழ் மொழிமாற்றம், சொந்தமாக வாக்கியம்-கட்டுரை-கதை அமைத்தல்,ஆங்கில படங்கள்-செய்திகளை புரிந்து கொள்ளுதல்....இப்படி அனைத்துக்கும் தகுதிப்படுத்துவதை சார்ந்தது இந்த வகுப்பு.

ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு சதவீதம் ஆர்வம் உள்ளவர்கள், மற்றும் அனைவரும்
மேலும் தெரிந்து கொள்ள தொடர்புகொள்ளலாம்...

8681848486,  9976619927

www.aangilamkarppom.webs.com

[email protected]

facebook : aangilamkarppom


ஸ்கைப் ஐ.டி  aangilamkarppom

உங்கள் பள்ளி / கல்லூரி / கல்வி நிலையத்தில் வைத்து...எங்களது "ஸ்போக்கன் இங்லிஷ் விழிப்புணர்வு நிகழ்ச்சி "  இலவசமாக நடத்த தொடர்புகொள்ளலாம்.


தங்களது ஆதரவினையும், பகிர்தலையும், ஆலோசனைகளையும்,  அறிவுரைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

                                                                                  தங்கள் அன்பிற்குறிய

                                                                              பா.ஸ்டான்லி ஆப்ரஹாம்

                             டபிள்யு டபிள்யு டபிள்யு புள்ளி ஆங்கிலம்கற்போம் புள்ளி வெப்ஸ் புள்ளி காம்

                                                                            www.aangilamkarppom.webs.com